சிரச – சக்தி நிவாரண யாத்திரைக்கான பணிகள் இன்றும் முன்னெடுப்பு

சிரச – சக்தி நிவாரண யாத்திரைக்கான பணிகள் இன்றும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 5:08 pm

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் ஆரம்பித்துள்ள சிரச – சக்தி நிவாரண யாத்திரைக்கான பணிகள் இரண்டாம் நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Sirasa-Shakthi-Sahana-Yathra-6

இதனை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் இடம்பெற்று வருகின்றன.

பிரேபுரூக் பிளேஸிலுள்ள கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவலகம், பன்னிப்பிட்டியிலுள்ள கலையகம், இரத்மலானை ஸ்டேய்ன் கலையகம், வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபம்
மற்றும் கொழும்பு விவேகானந்த சபை மண்டபம் ஆகிய இடங்களில் நிவாரணப் பொருட்களை கையளிக்க முடியும்.

Sirasa-Shakthi-Sahana-Yathra-1
ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே சிரச – சக்தி நிவாரண யாத்திரையின் முக்கிய குறிக்கோளாகும்.

குடிநீர் போத்தல்கள், அரிசி, பருப்பு, சீனி, பால்மா, ரின் மீன்கள் போன்ற பொருட்களை வழங்குவதன் ஊடாக சிரச – சக்தி நிவாரண யாத்திரையுடன் இணைந்துகொள்ளுங்கள்.

Sirasa-Shakthi-Sahana-Yathra-7

சிரச – சக்தி நிவாரண யாத்திரை தொடர்பான ​மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்காக 0114 896 896 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்