ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 84 முறைப்பாடுகள் பதிவு

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 84 முறைப்பாடுகள் பதிவு

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 84 முறைப்பாடுகள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 12:16 pm

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் 54 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிட்டது.

இவற்றில் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பான 12 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.

அரச உத்தியோகத்தர்களை அரசியற் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் 14 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அரச சொத்துக்கள் பாவனை தொடர்பில் 07 முறைப்பாடுகளும், சுவரொட்டிகள் காட்சிப்படுத்துகின்றமை தொடர்பில் 27 முறைப்பாடுகளும் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்