இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இன்று

இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இன்று

இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இன்று

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 8:55 am

இலங்கை – இந்திய அதிகாரிகளுக்கு இடையிலான உயர்மட்ட மீனவர் பேச்சுவார்த்தை இன்று புதுடில்லியில் நடைபெறவுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் இருநாட்டு மீனவர்களும் சட்ட ரீதியில் மீன்பிடிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் தமிழ் ஊடக இணைப்பாளர் எஸ்.டி. சதாசிவம் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தைக்குரிய திகதியை தமிழக அரசாங்கமே நிர்ணயிக்க வேண்டுமென எஸ்.டி. சதாசிவம் தெரிவித்தார்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இருநாட்டு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுவினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்