இந்தியாவில் பிடிபட்ட அதிசய பறவை

இந்தியாவில் பிடிபட்ட அதிசய பறவை

இந்தியாவில் பிடிபட்ட அதிசய பறவை

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 4:05 pm

இந்தியாவின் தேனி மாவட்டத்தில் வினோதமான அதிசய பறவை பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பறவையின் கழுத்தும், கண்களும் கழுகுக்கு உள்ளது போல் காணப்படுவதுடன். இறக்கை புறாவுக்கு உள்ளது போல் காணப்படுகின்றது.

குறித்த பறவையை பிடிக்க மாணவர்கள் முயற்சித்த போது அவர்களால் பிடிக்க முடியவில்லை.

இதனை நேரில் பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் அந்த பறவையை பிடித்து தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பின்னர் அந்த அதிசய பறவை குறித்த பகுதியில் உள்ள வனகாப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த பறவை காயமடைந்த நிலையில் புறாவின் இறக்கைகளுடன் கழுகு தோற்றத்தில் உள்ளது. இது வல்லூறு இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம். உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவோம் என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்