அரச நில அளவையியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை

அரச நில அளவையியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை

அரச நில அளவையியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 12:33 pm

அரச நில அளவையியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நில அளவையியலாளர் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளும் நில அளவையியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அமல் ஜயவர்த்தன குறிப்பிட்டார்.

தொழிற்சங்க நடவடிக்கையால் அதிவேக மார்க்கத்தின் நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய அளவீட்டு நடவடிக்கைகள், தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் அளவீட்டுப் பணிகள், பிம்சவிய செயற்றிட்டத்தின் அளவீட்டுப் பணிகளில் இருந்து தமது உறுப்பினர்கள் விலகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் காணி அபிவிருத்தி பிரதியமைச்சர் சிறிபால கம்லத்திடம் நியூஸ் பெஸ்ட் வினவியது.

பொறுப்பான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் வெளிநாடு சென்றுள்ளதால், அமைச்சர் நாடு திரும்பியவுடன் நில அளவையியலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்