அச்சுவேலியில் டிப்பர் மோதியதில் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு; சாரதிக்கு விளக்கமறியல்

அச்சுவேலியில் டிப்பர் மோதியதில் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு; சாரதிக்கு விளக்கமறியல்

அச்சுவேலியில் டிப்பர் மோதியதில் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு; சாரதிக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 7:33 pm

யாழ். அச்சுவேலி நவகிரி பகுதியில் டிப்பர் வண்டி மோதியதில் கர்ப்பிணி தாயொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான டிப்பர் வண்டியின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் டிப்பர் வண்டியின் சாரதியை  ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வண்டி நேற்று பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் மோதியதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த கர்ப்பிணி தாய் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகளால் டிப்பர் வண்டிக்கு தீ வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்