9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி பயிற்சி; பயிற்சியாளர் பலி (WATCH REPORT)

9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி பயிற்சி; பயிற்சியாளர் பலி (WATCH REPORT)

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2014 | 10:16 am

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் வாகா என்ற முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், பயிற்சியின் போது தவறுதலாக துப்பாக்கி இயங்கியதில்   உயிரிழந்துள்ளார்.

லேக்ஹவுஸ் நகரை சேந்தவர் சார்லஸ் வாகா, இவர் அரிசோனாவில் உள்ள திறந்தவெளி துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் பயிற்சியாளராக கடமையாற்றி வந்தார்.

குறித்த பயிற்சி மைதானத்தில் 9 வயது மாணவி ஒருவருக்கு இயந்திர துப்பாக்கியை வைத்து பயிற்சி அளித்தார் வாகா, இந்த சந்தர்ப்பத்தில்   தவறுதலாக துப்பாக்கி குண்டு பயிற்சியாளர் மீது பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்