குச்சவெளியில் யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் பலி

குச்சவெளியில் யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் பலி

குச்சவெளியில் யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் பலி

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2014 | 9:05 am

திருகோணமலை குச்சவெளி பகுதியில் காட்டு யானை தாக்கி, பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் நேற்று மாலை விறகு வெட்டுவதற்காக சென்றபோதே இந்த பெண்ணை காட்டு யானை தாக்கியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

காட்டு யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அயலவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

திரியாய் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானை தாக்கி, உயிரிழந்த பெண்ணின் சடலம், குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்