அச்சுவேலியில் டிப்பர் மோதியதில் பெண் பலி; பொதுமக்களால் டிப்பர் தீக்கிரை (Photos)

அச்சுவேலியில் டிப்பர் மோதியதில் பெண் பலி; பொதுமக்களால் டிப்பர் தீக்கிரை (Photos)

அச்சுவேலியில் டிப்பர் மோதியதில் பெண் பலி; பொதுமக்களால் டிப்பர் தீக்கிரை (Photos)

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2014 | 2:44 pm

யாழ். அச்சுவேலி நவகிரி பகுதியில் டிப்பர் வண்டி ஒன்று மோதியதில் 24 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இதனை அடுத்து நவகிரி பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டி துவிச்சக்கர வண்டியில் மோதியதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகளால் டிப்பர் வண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த டிப்பர் வண்டி பிரதேசத்தின் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானது என எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

achchuveli accident 3 achchuveli accident 1 achchuveli accident


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்