மோதல்கள் தொடரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலை நடத்த யுக்ரேன் ஜனாதிபதி தீர்மானம்

மோதல்கள் தொடரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலை நடத்த யுக்ரேன் ஜனாதிபதி தீர்மானம்

மோதல்கள் தொடரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலை நடத்த யுக்ரேன் ஜனாதிபதி தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 9:08 am

யுக்ரேனில் பாராளுமன்றத் தேர்தலினை நடத்துவதற்கு அந்த நாட்டு ஜனாதிபதி பெட்ரோ பொரஷென்கோ தீர்மானித்துள்ளார்.

தற்போதைய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களில் அதிகமானோர் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சின் ஆதரவாளர்கள் என்பதால் பாராளுமன்றத்தை கலைத்ததாக யுக்ரேன் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதியதோர் பாராளுமன்றம் அமைவது யுக்ரேனிய மக்களின் எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளதாகவும் பெட்ரோ பொரஷென்கோ தெரிவித்தார்.

இதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி யுக்ரேனிய பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

யுக்ரேனில் கிளரச்சியாளர்கள் மற்றும் படையினருக்கிடையிலான மோதல்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி, திடீர் தேர்தலை அறிவித்திருப்பது சர்வதேச அளவில் பல கேள்விகளை தோற்றுவித்துள்ளது

யுக்ரேனில் இடம்பெற்றுவரும் மோதல்களில் இதுவரை 2,000ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்