மொனராகலையில் இரு அரசியற் கட்சி ஆதரவாளர்களிடையே மோதல்

மொனராகலையில் இரு அரசியற் கட்சி ஆதரவாளர்களிடையே மோதல்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 3:42 pm

மொனராகலை, படல்கும்புர பகுதியில் இரண்டு அரசியற் கட்சி    ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த மோதலில் இரண்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டது.

மோதல் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட மேலும் சிலர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்