மேசை மீது ஏறிய நலின் ஹேவகே; தென் மாகாண சபையில் அமைதியின்மை (Video)

மேசை மீது ஏறிய நலின் ஹேவகே; தென் மாகாண சபையில் அமைதியின்மை (Video)

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 9:58 pm

தென் மாகாண சபையில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவகே சபையில் மேசையின் மேல் ஏறி எதிர்ப்பு தெரிவித்தமையினால் இந்த அமைதியின்மை ஏற்பட்டது.

காலி பஸ் தரிப்பிடத்தில் கடைகளை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலின் ஹேவகே மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற கேள்விக்கு பதில் கிடைக்காமையில் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

சபையில் அமைதியின்மை தொடர்ந்தமையில் 15 நிமிடங்களுக்கு தென் மாகாண சபை ஒத்திவைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்