பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விளக்கமறியலில்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விளக்கமறியலில்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 5:08 pm

பேராதனை பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் அடுத்த மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கலஹா சந்தியில் அமைந்துள்ள கண்டி நகர சபைக்குச் சொந்தமான அரச காணிக்குள் பிரவேசித்து கூடாரமொன்றை அமைத்ததாக குறித்த மாணவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

மாணவர்கள் மூவரும் நேற்று பேராதனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கைதான மாணவர்கள் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்