புதிய பாகிஸ்தான் உருவான பிறகு மறுமணம் செய்துகொள்வேன் – இம்ரான் கான்

புதிய பாகிஸ்தான் உருவான பிறகு மறுமணம் செய்துகொள்வேன் – இம்ரான் கான்

புதிய பாகிஸ்தான் உருவான பிறகு மறுமணம் செய்துகொள்வேன் – இம்ரான் கான்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 11:55 am

புதிய பாகிஸ்தானை உருவாக்கிய பிறகு மறுமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இம்ரான் கான், கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இதன்போது, தனது கனவான புதிய பாகிஸ்தானை உருவாக்கிய பின்னர் மறுமணம் செய்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பாகிஸ்தானை உருவாக்குவதுதான் எனது கனவு. இது உங்களுக்காக மட்டுமல்ல எனக்காகவும்தான். புதிய பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு நான் மறுமணம் செய்து கொள்வேன்.

இம்ரான் கான் 1995ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு பிரிந்தனர். இவர்களுக்கு சுலைமான், காசிம் என இரு குழந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளும் தாயுடன் பிரிட்ட னில் வசித்து வருகின்றன

62 வயதாகும் இம்ரான் கானுக்கு பெண்களுடன் உள்ள சகவாசம் குறித்து சமூக இணையதளங்களில் மோசமான கருத்துகள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்