பத்து கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானம், சிகரெட் கைப்பற்றல்

பத்து கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானம், சிகரெட் கைப்பற்றல்

பத்து கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானம், சிகரெட் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 7:11 pm

சுமார் பத்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட் வகைகள் பொரளை பகுதியில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலின் பிரகாரம் அந்த பகுதியில் பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

அனுமதிப்பத்திரம் இன்றி வீடொன்றினுள் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட் வகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்