பதுளையில் 40,000 பேருக்கு அடையாள அட்டைகள் இல்லை – ஆட்பதிவுத் திணைக்களம்

பதுளையில் 40,000 பேருக்கு அடையாள அட்டைகள் இல்லை – ஆட்பதிவுத் திணைக்களம்

பதுளையில் 40,000 பேருக்கு அடையாள அட்டைகள் இல்லை – ஆட்பதிவுத் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 7:33 am

ஊவா மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, பதுளை மாவட்டத்தில் இடம்பெறும் நடமாடும் சேவையில், இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

மாவட்டத்தில் 40,000ற்கும் அதிகமானவர்களிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லையென திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார தெரிவித்தார்.

விண்ணப்பித்தவர்களின் அடையாள அட்டைகளை இந்த வாரத்திற்குள் தயார்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தில் 10 இடங்களில் அண்மையில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இலவசமாக வழங்கப்படும் இந்த சேவையின் ஊடாக உச்ச பலனை பெற்றுக்கொள்ளுமாறு கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறினார்.

வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கும் வகையில், கெபே அமைப்பு, தேர்தல்கள் செயலகத்துடன் இணைந்து இந்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்