தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 60 முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 60 முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 60 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 7:05 pm

ஊவா மாகாண சபைத் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 60 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பதுளை மாவட்டத்தில் 16 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகளில் அரசாங்க ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் தொடர்பில் 9 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டுகின்றது.

அரச உடைமைகள் மற்றும் கட்டடங்களை பயன்படுத்தியமை குறித்து 4 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள செயலகம் மேலும் குறிப்பிடுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்