தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 311

தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 311

தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 311

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 6:54 pm

இலங்கை அணிக்கெதிரான தீர்மானமிக்க இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 311 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணித் தலைவர் அஞ்ஜலோ மெத்தியூஸ் 93 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 67 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுப்படுத்தியதோடு, திஸர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 36 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஹபீஸ் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்