தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை கொன்ற இந்தியப் பெண் (Photos)

தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை கொன்ற இந்தியப் பெண் (Photos)

தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை கொன்ற இந்தியப் பெண் (Photos)

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 6:15 pm

சிறுத்தையை தாக்கிக் கொன்ற கமலா தேவி என்ற இந்திய பெண் தொடர்பில் தற்போது ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தைச் சேர்ந்த கமலா தேவி என்ற 54 வயது பெண், தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறுத்தை அவரை திடீரென தாக்க ஆரம்பித்தது.

உதவிக்கு யாருமற்ற நிலையில், சிறுத்தையுடன் சுமார் 1 மணித்தியாலம் போராடி இறுதியாக சிறுத்தையை கொன்றார் கமலா தேவி.

அந்த சந்தர்ப்பத்தில் தன் வசம் இருந்த விவசாயத்திற்கு பயன்படுத்தும் கருவிகளால் சிறுத்தையை தாக்கி கொன்றுள்ளார் கமலா தேவி. இவரது வீரச் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

kamala-devi article-2734094-20CAB0F800000578-627_634x525


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்