தகுதிகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

தகுதிகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

தகுதிகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 10:29 am

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தகுதிகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள், மருந்தாளர்கள் உட்பட 5,000ற்கும் அதிகமானவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துள்ளதாக தகுதிகாண் மருந்துவ சேவை தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த குழுவின் பிரதம செயலாளர் சமன் ஜயசேகர கூறினார்.

தொழிற்சங்க நடவடிக்கையால் மருந்து விநியோகித்தல் உட்பட வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என சமன் ஜயசேகர தெரிவித்தார்.

சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலையின் ஊழியர்களை தொழிற்சங்க நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளவில்லை என தகுதிகாண் மருத்துவ சேவை தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த குழுவின் பிரதம செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை. யாழ் போதனா வைத்தியசாலை, திருகோணமலை பொது வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலை உள்ளிட்ட அநேகமான வைத்தியசாலைகளில் இன்று காலை முதல் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் தகுதிகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளக நோயாளர்களுக்கான அவசர மருந்து வகைகளை மாத்திரமே இன்று விநியோகித்து வருவதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

ஏனைய நோயாளர்களுக்கு மருந்து வகைகள் விநியோகிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்கவிடம் நியூஸ் பெர்ஸ்ட் வினவியபோது, இந்த கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டியுள்ளதாக பதிலளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்