சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் மீளாய்வு

சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் மீளாய்வு

சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் மீளாய்வு

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 3:36 pm

புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜென்ரல் ஜகத் விஜேதிலக்க குறிப்பிட்டார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலை, சமூகமயம் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் இதனூடாக கண்டறியப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வவுனியா புனர்வாழ்வு மையத்தில் 109 பேருக்கு தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

ஒரு வருடகால பயிற்சிகளை முன்னெடுக்கும் இவர்கள் அடுத்தவருடத்தின் நடுப்பகுதியில் விடுவிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்  சுட்டிக்காட்டினார்.

மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மீளாய்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜென்ரல் ஜகத் விஜேதிலக்க மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்