கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் நியூஸிலாந்தில் கைது

கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் நியூஸிலாந்தில் கைது

கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் நியூஸிலாந்தில் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 3:02 pm

சுவிட்ஸர்லாந்தில் 13 வருடங்களுக்கு முன்னர் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கையர் ஒருவர் நியூஸிலாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்தின் பின்னர் 2001ஆம் ஆண்டு குறித்த இலங்கையர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நியூஸிலாந்து சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர் 2004ஆம் ஆண்டு அவர் நியூஸிலாந்து பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது உதவியாளரை கொலைசெய்தமை தொடர்பில் 42 வயதான இலங்கையரை சுவிட்ஸர்லாந்து பாதுகாப்பு பிரிவினர் தேடிவந்திருந்தனர்.

23 வயதான பெண்ணொருவரே கொலைசெய்யப்பட்டதாக சர்வதேசத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கைதுசெய்யப்பட்ட இலங்கையர் இன்று ஒக்லண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்