ஐ இசை வெளியீடு; சிறப்பு விருந்தினர்களாக ஆர்னல்ட், ஜாக்கி சான் பங்கேற்பு

ஐ இசை வெளியீடு; சிறப்பு விருந்தினர்களாக ஆர்னல்ட், ஜாக்கி சான் பங்கேற்பு

ஐ இசை வெளியீடு; சிறப்பு விருந்தினர்களாக ஆர்னல்ட், ஜாக்கி சான் பங்கேற்பு

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 12:41 pm

தமிழில் வெளிவரும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், ஹொலிவுட் நடிகர் ஆர்னல்ட் ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார்.

அதேபோல், தெலுங்குப் பதிப்புக்கான ‘ஐ’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி சான் பங்கேற்கிறார். இந்த தகவலை ஐ படக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

தீபாவளிக்கு திரைக்கு வரும் ‘ஐ’ திரைப்படத்தின் படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ஆம் திகதி சென்னையில் நடத்த உள்ளனர்.

விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவானது ‘ஐ’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் ‘ஐ’ திரைப்படத்திற்காக, இயக்குநர் ஷங்கர் கடினமாக உழைத்துள்ளார். விக்ரம் இப்படத்திற்காக தன் உடலமைப்பை மாற்றி, எடையை 50 கிலோ வரை குறைத்தும், 130 கிலோ வரை கூட்டியும் தனது உழைப்பை கொடுத்துள்ளார். படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை 15 மொழிகளில், 15,000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

இரசிகர்கள் இப்படத்தின் வெளியீடு குறித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்க, இதுவரை வெளியீட்டு திகதியை அறிவிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், தீபாவளி திரைவிருந்தாக வருகிறது ‘ஐ’. படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ஆம் திகதி அன்று பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்