‘ஐஸ் பக்கட்’ சவாலுக்கு மற்றுமொருவர் பலி

‘ஐஸ் பக்கட்’ சவாலுக்கு மற்றுமொருவர் பலி

‘ஐஸ் பக்கட்’ சவாலுக்கு மற்றுமொருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 4:16 pm

உலகம் முழுவதும் தற்போது ‘ஐஸ் பக்கட்’ சவால் குறித்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏ.எல்.எஸ் என்ற அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘ஐஸ் பக்கட்’ சவால் குளியல் தற்போது உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய பிரமுகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐஸ் பக்கட் குளியல் மூலம், அமெரிக்காவில் மாத்திரம் 9.4 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எஸ். என்னும் நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும். இதில் பங்கேற்பவர் ஒரு பக்கட்டில் ஐஸ் நீரை எடுத்துக் கொண்டு அதனை அவர் மீது ஊற்றி கொள்ள வேண்டும். அதன் பின்பு அவருக்கு தெரிந்த மூன்று பேரை கைக்காட்ட வேண்டும். அவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இது போல செய்ய வேண்டும். இதனை செய்ய தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு 100 டொலர் உதவியாக வழங்க வேண்டும். இதன் மூலம் இந்த நோயை பற்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள் என்பது இதன் நோக்கம்.

இந்த ஐஸ் பக்கட் குளியலை உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் பங்கேற்று குளித்து உள்ளனர்.

இந்த ஐஸ் பக்கட் சவால் குளியல் ஆபத்து நிறைந்ததும் கூட இந்த குளியலில் ஈடுபட்டு ஏற்கனவே நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

ஸ்கொட்லாந்தை சேர்ந்த கெமரூன் லான்காஸ்டர் என்ற 18 வயது இளைஞர் ஐஸ் பக்கட் சவால் குளியலில் ஈடுபட்ட போது உயிரிழந்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்