உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 7:14 am

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில், தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு 15 ரூபாவாகக் காணப்பட்ட தீர்வை 40 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 25 ரூபாவாகக் காணப்பட்ட தீர்வை 35 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் உற்பத்திகளை பாதுகாக்கும் நோக்கில் தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கினை 80 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலைக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தில் இதுவரையில் சுமார் ஒரு இலட்சம் கிலோகிராம் உருளைக்கிழங்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

பதுளை, வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் ஊவபரணகம ஆகிய பகுதிகளில் சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக உருளைக்கிழங்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

அத்துடன் அறுவடை நிறைவுபெறும் வரை, உருளைக்கிழங்கு கொள்வனவு இடம்பெறவுள்ளதாக சதோச நிறுவனத்தின் தலைவர் நலின்த பெர்னாந்து குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்