இலங்கையர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற நால்வர் கைது

இலங்கையர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற நால்வர் கைது

இலங்கையர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 7:40 am

இலங்கையர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் நடவடிக்கை தொடர்பில் இந்திய பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கையர்கள் உட்பட 04 சந்தேகநபர்கள் ஆந்திராவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வர்த்தக கப்பலில் இலங்கையர்கள் 06 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக ஆட்கடத்தற்காரர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதற்கமைய, இலங்கையர்கள் தலா 05 இலட்சம் இந்திய ரூபாய்களை ஆட்கடத்தற்காரர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு பயணிப்பதற்காக இந்தியாவிற்கு விமானம் மூலம் வருகைதந்த 06 இலங்கையர்கள் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் இந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

படகு மூலம் 200 கடல்மைல் தூரத்திற்கு சென்று, அங்கிருந்து வர்த்தக கப்பல் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்க முடியுமென ஆட்கடத்தற்காரர்கள் இலங்கையர்களுக்கு உறுதியளித்திருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்