இலகு வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா

இலகு வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா

இலகு வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 8:55 am

மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸிம்பாவ்பே அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 198 ஒட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவ்பே அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது

இதனடிப்படையில் முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 350 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய சார்பில் ஏரன் பின்ச், மிச்சல் மார்ஷ் மற்றும் கிலென் மெக்ஸ்வல் ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். கிலென் மெக்ஸ்வல் 46 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 93 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

351 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய சிம்பாவ்பே அணி 39.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய சார்பில் ஸ்டீவன் ஸ்மித் 3 விக்கெகட்டுக்களை கைப்பற்றியதோடு மிச்செல் ஸ்டார்க் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்

போட்டியின் நாயகனாக மிச்சல் மார்ஷ் தெரிவானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்