இரண்டாவது போட்டியினை தன்வசப்படுத்தியது இலங்கை

இரண்டாவது போட்டியினை தன்வசப்படுத்தியது இலங்கை

இரண்டாவது போட்டியினை தன்வசப்படுத்தியது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2014 | 10:33 pm

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இலங்கை 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

311 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 44 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் மொஹமட் ஹபீஸ் 62 ஓட்டங்களையும், அஹமட் ஷேசாட் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் 5 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் திஸர பெரேரா 3 விக்கெட்டுக்களையும், சீக்குகே பிரசன்ன, லசித் மலிங்க மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணித் தலைவர் அஞ்ஜலோ மெத்தியூஸ் 93 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 67 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுப்படுத்தியதோடு, திஸர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 36 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஹபீஸ் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பதிவு செய்து சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்