ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான வழக்கினை அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான வழக்கினை அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான வழக்கினை அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 6:59 pm

முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் வங்கி கணக்குகள் தொடர்பான வழக்கினை செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் சொத்து விபரங்கள்  சமர்பிக்கப்பட்ட போது வங்கி கணக்குகள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியின் கணனி நிபுணர்களுக்கு அமைவாக தனியார் வங்கியின் கணனி சாட்சிகளை விசாரணை செய்வதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.

இதனடிப்படையில் குறித்த விசாரணையை செப்டெம்பர் மாதம் 03, 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் முன்னெடுக்குமாறு அறிவித்த நீதவான், வழக்கினை செப்டெம்பர்  மாதம் 26ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக இரு தரப்பினருக்கும் அறிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்