வெலிசரயில் வாகன விபத்து; இருவர் பலி,7 பேர் காயம்

வெலிசரயில் வாகன விபத்து; இருவர் பலி,7 பேர் காயம்

வெலிசரயில் வாகன விபத்து; இருவர் பலி,7 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 12:34 pm

வெலிசர பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறியரக கொள்கலன் வாகனமொன்று, சிறியரக லொறியுடன் இன்று அதிகாலை 4 மணியளவில் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கோவில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக கிரான்ட்பாஸ் பகுதியில் இருந்து லொறியில் சென்ற குழுவினரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் 36 வயதான பெண்ணொருவரும், இளைஞரொருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கொள்கலன் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்