மன்னாரில் அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை அதே இடத்தில் நிர்மாணிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை அதே இடத்தில் நிர்மாணிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை அதே இடத்தில் நிர்மாணிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 1:50 pm

மன்னார் திருக்கேதீஸ்வரம் சிறுநாவல் குளம் பகுதியிலுள்ள வெற்றுக் காணியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தி கனகரட்னம் அதே காணியில் பிள்ளையார் சிலையை மீள நிர்மாணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வெற்றுக் காணியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை கடந்த பெப்ரவரி மாதம் அகற்றப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சிலை அகற்றப்பட்ட சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் இவர்களை கைது செய்து , வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையார் சிலை அமைக்கப்பட்டிருந்த காணி தமக்கு சொந்தமானது என தெரிவித்து கைது செய்யப்பட்ட பெண் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்