பொலிஸாரை பாதுகாப்பிற்காக நியமிக்கும் அளவுக்கு உபுல் ஜயசூரியவிற்கு அச்சுறுத்தல் இல்லை

பொலிஸாரை பாதுகாப்பிற்காக நியமிக்கும் அளவுக்கு உபுல் ஜயசூரியவிற்கு அச்சுறுத்தல் இல்லை

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 7:18 pm

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக, பொலிஸ் அதிகாரிகளை வழங்கும் அளவிற்கு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவிற்கு அச்சுறுத்தல் இல்லையென, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சின் செயலாளர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உபுல் ஜயசூரியவின் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படுவதாக இதன்போது அமைச்சின் செயலாளரின் அறிக்கையை சமர்ப்பித்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

தேவை ஏற்படின் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றிலிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்