பொகவந்தலாவையைச் சேர்ந்தவர் கடவத்தையில் சடலமாக மீட்பு

பொகவந்தலாவையைச் சேர்ந்தவர் கடவத்தையில் சடலமாக மீட்பு

பொகவந்தலாவையைச் சேர்ந்தவர் கடவத்தையில் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 7:11 pm

பொகவந்தலாவை டின்சின் பகுதியை சேர்ந்த ஒருவர் கடவத்தையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தங்கியிருந்த கடவத்த கனேமுல்ல பகுதி வீட்டிலிருந்து சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

​குறித்த நபர் கடவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளுக்காக சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு சம்பவம் தொடர்பில் அறியப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும், குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் கடவத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்