புலமைப் பரிசில் பரீட்சை ”வெண்டி மரச்” சர்ச்சை; நடவடிக்கை எடுக்க இணக்கம்

புலமைப் பரிசில் பரீட்சை ”வெண்டி மரச்” சர்ச்சை; நடவடிக்கை எடுக்க இணக்கம்

புலமைப் பரிசில் பரீட்சை ”வெண்டி மரச்” சர்ச்சை; நடவடிக்கை எடுக்க இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 4:21 pm

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூல வினாத்தாளில் காணப்பட்ட குளறுபடிக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாளில் பகுதி – 02  36 ஆம் வினாவில் வெண்டிச் செடிக்கு பதிலாக வெண்டி மரம் என குறிப்பிடப்பட்டமையே இந்த குளறுபடிக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமற்ற சொல் இவ்வாறு கேள்வியில் உள்ளடக்கப்பட்டமையானது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய தமிழ் மொழி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, தமிழ் மொழிமூல வினாத்தாளில் ஏற்பட்டிருந்த குளறுபடிகள் தொடர்பில் ஆராய்ந்து மாணவர்களுக்கு சிறந்த முறையில் தீர்வொன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்