புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கத்தி குத்து; ஒருவர் உயிரிழப்பு (video)

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கத்தி குத்து; ஒருவர் உயிரிழப்பு (video)

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 11:55 am

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

unnamed 04  nnnnnnn

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

unnamed 03  nnnnnn

சம்பவத்தில் அவர்களது தந்தையே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறுகின்றார்.

unnamed 06 nnnn

இன்று முற்பகல் 11.30 அளவில் வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இருந்து வெளியில் வரும்போது அங்கு வந்த ஒருவர் கூரிய கத்தியினால குத்தியுள்ளனார்.

கொட்டாஞ்சேனையில் 17வயது யுவதி ஒருவரைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இன்று விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான இளைஞருக்கு இன்று நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.

சந்தேகநபரும் அவரது தந்தையும் சகோதரியும் நீதிமன்றக் கட்டத்தொகுதியில் இருந்து வெளியே வரும் போது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் யுவதியின் தந்தை அங்கு வந்து கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது காயமடைந்த மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இளைஞரின் 61 வயதான தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்