நானுஓயாவில் பஸ் விபத்து; 8 பேர் காயம்

நானுஓயாவில் பஸ் விபத்து; 8 பேர் காயம்

நானுஓயாவில் பஸ் விபத்து; 8 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 9:43 am

நானுஓயா, ஹோட்டன்தென்ன பகுதியில் பஸ்சொன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் பஸ்சின் சாரதி, உதவியாளர் மற்றும் 06 பெண்கள் காயமடைந்துள்ளனர்.

பஸ் விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹோட்டன்தென்ன பகுதியை பார்வையிட்டு, திரும்பிக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்