தப்பிச் சென்ற ”குடு ச்சாமர” கைது

தப்பிச் சென்ற ”குடு ச்சாமர” கைது

தப்பிச் சென்ற ”குடு ச்சாமர” கைது

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 6:51 pm

போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த குடு ச்சாமர என்றழைக்கப்படும் துஷித ஷாமர கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான பெயரில் வெளிநாட்டுக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வருகைத் தந்த சந்தர்பத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

”குடு ச்சாமர” என்றழைக்கப்படும் துஷித ஷாமர 500 கிராம் ஹெரோயினுடன் கடந்த ஜூன் மாதம் தலங்கமையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டார்.

விளக்கமறியிலில் இருந்தப் போது சுகவீனமுற்றதால் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சந்கேநபர் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்