செஃல்பியில் சாதனை படைத்த பெண்

செஃல்பியில் சாதனை படைத்த பெண்

செஃல்பியில் சாதனை படைத்த பெண்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 11:37 am

உலகிலேயே அதிகம் ‘செல்ஃபி’ படங்களைக் கொண்ட ‘செஃல்பி ராணி’ யார் தெரியுமா?

​ஹொலிவுட்டின் கிம் கிர்திஷன் உள்ளிட்ட நடிகைகளின் பெயர்களை எல்லாம் நீங்கள் சொன்னால் அது தவறு. இவர் ஒரு சாதாரணப் பெண்.

selfies

தாய்லாந்தில் வசிப்பவர் 40 வயதான மார்தாவோ மோர்தார். இவர் ‘இன்ஸ்டாகிராம்’ என்ற சமூக வலைதளத்தில் தன்னைத் தானே எடுத்துக்கொண்ட ‘செல்ஃபி’ படங்களைப் பதிவேற்றும் வழக்கம் கொண்டவர். இதுவரை இவர் 12,000 ‘செல்ஃபி’ படங்களை இந்த வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

பேங்கொக்கில் உள்ள ‘ரூம் ஆஃப் ஆர்ட்’ நிறுவனத்தின் உரிமையாளர் தான் தன்னுடைய கணவர் என்று தன் வலைப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் இவரை சுமார் 20,000 பேர் வலைதளம் மூலம் பின் தொடர்கிறார்கள்.

தன்னுடைய குளியலறையில் உள்ள கண்ணாடி முன் நின்று படமெடுப்பதுதான் இவருக்கு மிகப் பிடிக்கும் என்றாலும், இவரின் புகைப்படங்கள் எதுவுமே ஆபாசமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்