சட்டவிரோத மிருக வேட்டையில் ஈடுபட்ட சிறுவர்களுக்குப் பிணை

சட்டவிரோத மிருக வேட்டையில் ஈடுபட்ட சிறுவர்களுக்குப் பிணை

சட்டவிரோத மிருக வேட்டையில் ஈடுபட்ட சிறுவர்களுக்குப் பிணை

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 5:00 pm

மன்னார், மஹாவில்லு காட்டுப்பகுதியில் மிருகங்களை சட்டவிரோதமாக வேட்டையாடிய இரண்டு சிறுவர்கள், நீதிமன்றதால் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சிறுவர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தியதை அடுத்து, தலா 5,000 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் நவம்பர் 03 திகதி மீண்டும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இரண்டு சிறுவர்களும்  நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 17 கிலோகிராம் நிறைகொண்ட உடும்பு மற்றும் மரை இறைச்சிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மிருகங்களை பொறிவைத்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்