குழந்தையை கொலை செய்த தந்தைக்கு விளக்கமறியல்

குழந்தையை கொலை செய்த தந்தைக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 9:37 pm

ஒரு வயதும் ஒன்பது மாதங்களுமான தனது பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட
சந்தேகநபரான தந்தை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பேருவளை மாகல்கந்த பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட 29 வயதான குறித்த தந்தையை, மனநல வைத்தியரிடம் அனுப்பி வைத்திய அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளுமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் உத்தரவிட்டார்.

செப்டெம்பர் 4ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்