கராபிட்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணியில் இருந்து விலகல்

கராபிட்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணியில் இருந்து விலகல்

கராபிட்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணியில் இருந்து விலகல்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 1:31 pm

கராபிட்டி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகளில் இருந்து இன்று முற்பகல் முதல் விலகியுள்ளனர்.

அத்துடன், நோயாளர்களை பதிவுசெய்யும் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கராபிட்டிய கிளையின் தலைவர் பிரசான் குரே தெரிவித்தார்.

வைத்தியசாலையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

குப்பைகள் அகற்றப்படாமையினால் வைத்தியசாலை வளாகம் அசுத்தமடைந்து காணப்படுவதாகவும் பிரசான் குரே மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, குப்பைகள் அகற்றப்படும் என மாநகர மேயர் எழுத்துமூலம் உறுதியளிக்கும் வரையில், இந்த நடவடிக்கை தொடருமென கராபிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா கூறினார்.

இந்நிலையில், குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு மாநகர சபை ஊழியர்கள் வைத்தியசாலை வளாகத்திற்கு வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் காணப்படும் குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி மாநகர சபையின் மேயர் மெத்சிறி டி சில்வா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்