கராபிடி போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

கராபிடி போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 9:27 pm

கராபிடி போதனா வைத்தியசாலையில் சுமார் ஒரு மாத காலமாக நிலவிய கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு கிடைத்தது.

காலி மேயர் வழங்கிய எழுத்து மூலமான உறுதி மொழிக்கு அமைவாகவே இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.

கழிவு அகற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக கராபிடி போதனா வைத்தியசாலையின் சூழல் மாசடைந்து காணப்பட்டது.

காலி மாநகர சபைக்கும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் இடையில் காணப்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவதில் இருந்து காலி மாநகர சபை விலகியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதித்தல் மற்றும் பொதுவான சிகிச்சை நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்தனர்.

கராபிடிய வைத்தியசாலைக்கு சென்ற காலி மாநகர சபையின் மேயர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

குப்பைகளை அகற்றுவதாக மேயர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்