‘ஐஸ் பக்கட்’ சவாலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – புத்திக பத்திரண

‘ஐஸ் பக்கட்’ சவாலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – புத்திக பத்திரண

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 8:41 pm

இணையத்தளங்கள் ஊடாக பிரபல்யம் அடைந்து வரும் ஐஸ் பக்கட் நிகழ்ச்சி திட்டம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

[quote]நாட்டில் 10ற்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாரிய தண்ணீர்  தட்டுப்பாட்டில் பாதிக்கப்பட்டு குடிப்பதற்கு ஒரு கோப்பை தண்ணீர் கூட இன்று மக்கள் தவிக்கின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க ஐஸ் நிறைத்த பக்கட்களில் இவ்வாறு நீரை வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும். குறித்த மூளை  தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் 2,000 பேர் வரையிலேயே உள்ளனர். ஆனால் சிறு நீரக மற்றும் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் பல்லாயிரம் பேர் வரையில் உள்ளனர். தெரியா நாட்டின் தெரியாத நிதியத்திற்கு இவ்வாறு நிதி வழங்குவது எந்தளவிற்கு முட்டாள் தனமாகும் என்பது தொடர்பில் கேள்வி எழுப்புகின்றோம். அரசாங்கம் பிரமிட் நடவடிக்கைக்கு எதிராக பல மில்லியன் கணக்கில் செலவிட்டு பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்தது. ஆனால் ஐஸ் பக்கட் திட்டத்தில் பிரமிட் அரசாங்கம் நடவடிக்கையை விட கூடுதலான நிதி செல்கையில் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையின் ஊடாக​ பின்னணியில் அரசாங்கத்தின் நிழல் காணப்படுகின்றதா என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பட்டினி தொடர்பான போராட்டங்களை மூடி மறைக்க அரசாங்கம் செயற்படுவதாகவே சந்தேகம் ஏற்படுகின்றது. ஆகவே  நாட்டில் உள்ள புத்திசாலிகள், களைஞர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள்  இந்த ஐஸ் பக்கட் சவாலுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்