உலக கிண்ண போட்டிகள் வரை இந்திய அணியை டங்கன் பிளச்சர் வழிநடத்துவார் -தோனி

உலக கிண்ண போட்டிகள் வரை இந்திய அணியை டங்கன் பிளச்சர் வழிநடத்துவார் -தோனி

உலக கிண்ண போட்டிகள் வரை இந்திய அணியை டங்கன் பிளச்சர் வழிநடத்துவார் -தோனி

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 12:38 pm

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை இந்திய அணியை டங்கன் பிளச்சர் வழிநடத்துவார் என மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

டங்கன் பிளச்சரே தற்போதும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் எனவும் தோனி கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரி அணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதன் மூலம் அவரன் அதிகாரங்கள் மற்றும் பதவி நிலை குறைக்கப்படவில்லை என  தோனி குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள  இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான  முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டிக்கு முன்னதாக அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதனிடையே அணியின் பணிப்பாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதை மஹேந்திர சிங் தோனி வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்