அனந்தி சசிதரனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

அனந்தி சசிதரனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 7:25 pm

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக முல்லைத்தீவில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இடம்பெறவிருந்தது.

இந்த நிலையிலேயே, நீதிமன்றத்திற்கு வருகை தரவிருந்த அனந்தி சசிதரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

எனினும், இந்த வழக்கு விசாரணைகளுக்கு தான் இன்றைய தினம் சமூகமளித்திருக்கவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் அரச சார்பு குழுக்களாலும் இராணுவ புலனாய்வு பிரிவினராலும் திட்டமிட்டு நடத்தப்பட்டுவதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

[quote] இது திட்டமிட்டு அரச சார்பு குழுக்கள், அரசாங்கத்துடன் சார்ந்து இருக்கின்றவர்களும் இராணுவ அரச புலனாய்வாளர்களும் திட்டமிட்டு செய்யும் வேலை. அவர்கள் தொடர்ந்து எங்களுடைய மூன்று வழக்கு தவனைகளுக்கு இவ்வாறான குழப்பத்தை பொலிஸாரின் உதவியுடன் தான் செய்துகொண்டிருக்கின்றார்கள். காணாமற்போனவர்கள் என்றால், ஆவணமாக கொடுக்க வேண்டும். எல்லாருமே காணாமற்போனவர்கள் போன்ற ஒரு குழப்பத்தை உண்டுபண்ணும் வேலையில் இராணுவ புலனாய்வாளர்களும் அரச தரப்பு புலனாய்வாளர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இது திட்டமிட்ட வகையில அரசாங்கத்தின் வேலை. எங்களின் ஆட்கொணர்வு மனு வழக்கு அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் போட்ட வழக்கை முறியடிக்கிறதுக்கான முயற்சி. அவர்கள் பஸ்சில் ஏற்றிவந்துதான் கடந்த இருமுறை பொலிஸாரின் உதவியுடன் செய்திருந்தார்கள்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்