அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2014 | 9:36 am

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனைசெய்த 400 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை கண்டறியும் பொருட்டு, அண்மையில் சுமார் 1,500 வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம்.டக்ளஸ் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனைசெய்யும் வர்த்தக நிலையங்களை கண்டறியும் வகையில், தொடர்ச்சியாக தேடுதல்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி நள்ளிரவு முதல் அரிசிக்கு அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை  நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் கல்லு நீக்கப்பட்ட ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 77 ரூபாவாகவும், வெள்ளை நாட்டரசி 68 ரூபாவாகவும், சிவப்பு நாட்டரசி மற்றும் வௌ்ளை அரிசி ஒருகிலோகிராம் 66 ரூபாவாகவும், சிவப்பரிசி ஒருகிலோகிராம் 60 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாட்டு விலையைவிட கூடிய விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 0771 088 922 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம்.டக்ளஸ் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்