விராட் கோலியை திருமணம் செய்வது தொடர்பில் இந்தி நடிகை பதில்

விராட் கோலியை திருமணம் செய்வது தொடர்பில் இந்தி நடிகை பதில்

விராட் கோலியை திருமணம் செய்வது தொடர்பில் இந்தி நடிகை பதில்

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2014 | 12:43 pm

இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இந்திய துணை கேப்டன் விராட் கோலி தனது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை அழைத்துச் சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெஸ்ட் தொடரில் அவர் சொதப்பியதால் காதலியுடன் சுற்றியதே காரணம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகார்கள் சென்றுள்ளன.

இந்திய அணியின் மேலாளர் சுனில்தேவ் கூறுகையில், ‘கோலி, அனுஷ்கா ஷர்மாவுடன் தங்கியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் காதலியை அழைத்து வந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பெண் தோழிகளை அழைத்துச் செல்வது நமது கலாசாரத்திற்கு எதிரானது. இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் சபைக்கு அறிக்கை அளிப்பேன்’ என்றார்.

Anushka-Sharma-15790

அனுஷ்கா ஷர்மாவை விராட் கோலி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார், அதனால் தான் அவர் இங்கிலாந்து பயணத்தில் கோலியுடன் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார் என்று இந்திய கிரிக்கெட் சபை அதிகாரிகள் கூறியதாக இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் கோலியை திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலை அனுஷ்கா ஷர்மா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவரது பிரதிநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் ‘அனுஷ்கா ஷர்மா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை, இது வெறும் வதந்தி. இது போன்ற யூகமான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்