சர்ச்சையை ஏற்படுத்திய இஸ்ரேல் தொடர்பான மெஸ்ஸியின் கருத்து

சர்ச்சையை ஏற்படுத்திய இஸ்ரேல் தொடர்பான மெஸ்ஸியின் கருத்து

சர்ச்சையை ஏற்படுத்திய இஸ்ரேல் தொடர்பான மெஸ்ஸியின் கருத்து

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2014 | 11:56 am

இஸ்ரேலிய படையினரின் தாக்குதலுக்கு அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நட்சத்திரம் மெஸ்ஸி பேஸ்புகில் வருத்ததினை தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனம் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் சிறுவர்கள் உயிரிழந்துள்ளமைக்கு இந்த வருத்ததினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தனது பேஸ்புக்கில் ஒரு தந்தை என்ற வகையிலும் யூனிசெஃப் நல்லெண்ண தூதுவர் என்ற வகையிலும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் மோதல்களில் எண்ணற்ற குழந்தைகள் உயிரிழக்கின்றமை தமக்கு வருத்தம் அளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து தொடர்பில் இஸ்ரேலியர்கள் கடும் கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த மெஸியின் ரசிகரான இஸ்ரேலிய சிறுவன் ஒருவனின் படத்தை வெளியிட்டு இதற்கு என்ன கூறுகின்றீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர்.

இதுவரையில் குறித்த மோதலில் 2,097 பாலஸ்தீனியர்களும் 68 இஸ்ரேலியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்