மலையகத்தில் கடும் மழை; நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மலையகத்தில் கடும் மழை; நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மலையகத்தில் கடும் மழை; நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 12:43 pm

லக்ஸபான மற்றும் கெனியன் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நீர்த் தேக்கங்களின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

ஏனைய மாவட்டங்களில் அனர்த்தங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எனினும், மொனராகலை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக வீடுகள் சிலவற்றிற்கு ஓரளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்