மட்டு ரயில் போக்குவரத்திற்கு இடையூறு

மட்டு ரயில் போக்குவரத்திற்கு இடையூறு

மட்டு ரயில் போக்குவரத்திற்கு இடையூறு

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2014 | 9:20 am

மட்டக்களப்பு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

ஹபரண பளுகஸ்வெவ பகுதியில் காட்டுயானை ரயிலுடன் மோதுண்டமையே ரயில் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளமைக்கு காரணமாக அமைந்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இன்று அதிகாலை காட்டு யானை மோதியதால், ரயில் தடம்புரள்வு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, ரயில் தடம்புரள்வு காரணமாக சிரமங்களை எதிர்நோக்கியுள்ள பயணிகளுக்கு பஸ் மற்றும் வேறு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்